கொழும்பிலுள்ள நோர்வே தூதரகமானது இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோருடன் சந்திப்பை ஏற்படுத்தி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டது.
அரசாங்க அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை அடிக்கடி சந்தித்து வரும் நோர்வே தூதரகம், கடந்த சில மாதங்களாக, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகளைச் சந்தித்து, உள்ளுராட்சி, மாகாணசபை மனித உரிமைகள், சமூக அபிவிருத்திகள் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி வருகின்றது.
அந்தவகையில் சாணக்கியன் எம்.பி மற்றும் எம்.ஏ சுமந்திரன் எம்.பி ஆகியோருடன் மேற்கொண்ட கலந்துரையாடலில், வெளிநாட்டு பயணங்களின் நோக்கம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் நோர்வே அரசானது தமக்கான தீர்வுகள் கிடைப்பதற்கான அழுத்தங்களை தமது அரசு மீது பிரயோகிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக சாணக்கியன் எம்.பி தெரிவித்தார்.