லங்கா பிரீமியர் லீக் தொடரில் முதலாவது தெரிவுகாண் போட்டியாக யாழ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று (19.12) இரண்டாவது போட்டியாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் காலி அணி வெற்றி பெற்று இம்முறையும் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய காலி கிளாடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றது. இதில் குசல் மென்டிஸ் 85(53) ஓட்டங்களையும், தனுஷ்க குணதிலக்க 55(42) ஓட்டங்களையும், பானுக்க ராஜபக்ஷ 25(15) ஓட்டங்களையும் பெற்றனர். குசல் மென்டிஸ், தனுஷ்க குணதிலக்க 127 ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக பெற்றனர். பந்துவீச்சில் வஹாப் ரியாஸ், திசர பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள். கடந்த இரண்டு போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்ட விஜயஸ்காந்த் சிறப்பாக பந்துவீசிய போதும் இந்த போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
189 என்ற வெற்றி இலக்கோடு துடுப்பாடிய யாழ் அணி 26.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களை பெற்றது. இதில் ரஹ்மனுள்ள குர்பாஸ் 59 (34) ஓட்டங்களையம், வனிது ஹசரங்க 29 (15) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நுவான் துஷார 5 விக்கெட்களை
நடப்பு சம்பியனான யாழ் அணி, தம்புள்ள ஜியன்ட்ஸ் அணியுடன் இரண்டாவது தெரிவுகாண் போட்டியில் விளையாடி வெற்றி பெற்றாலே இறுதிப் போட்டிக்குத்தெரிவாக முடியும்.
கடந்த வருடம் யாழ் மற்றும் காலி அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.