வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி வந்துகொண்டிருந்த இளைஞரொருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக கெப்பித்திகொள்ளாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (19) மாலை இடம்பெற்ற சம்பவத்தில் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த சிவபால சுந்தரம் மயூரன் (33வயது) என தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது- 69வது தேசிய பூப்பந்தாட்ட விளையாட்டு நிகழ்வு கொழும்பில் நடைபெற்று வருகின்ற நிலையில் இவர் நடுவராக கடமையாற்றி வந்துள்ளார்.
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி ரயிலில் வருகை தந்து மீண்டும் மோட்டார் சைக்கிளில் திருகோணமலை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது யானை வீதியால் கடக்க முற்பட்டபோது தாக்கியதாகவும் தெரியவருகின்றது.
இளைஞரின் சடலம் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் தெரியவருகின்றது. விசாரணைகளை கெப்பித்திக்கொள்ளாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மரணமடைந்த மயூரன் பூப்பந்து, கிரிக்கெட் உட்பட பல விளையாட்டுகளில் நடுவராக செயற்பட்டு வந்த அதேவேளை, சிறந்த மேல்வல்லுநர் வீரராகவும் திகழ்ந்துள்ளார். அத்தோடு விளையாட்டு சம்மந்தப்பட்ட பல செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருபவர் என அறியமுடிகிறது.