மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D லக்ஷ்மன் கடந்த 10 நாட்களுக்குள் நடைபெற்ற மனதுக்கு வேதனையளிக்க கூடிய சம்பவங்களே தனது ஓய்வு அறிவிப்புக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 14ஆம் திகதியோடு தான் ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், அடுத்த வருடம் தனது 80 ஆவது பிறந்த நாளோடு தனது பதவியிலிருந்து விலக திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் தனக்கு நடந்த விரும்பத்தகாத சம்பவங்களே இந்த பதவி விலகளுக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பதில் நிறைவேற்று அதிகாரியாக உயரிய சம்பளத்துடனும், சலுகைகளுடனும் பதவி கிடைத்துள்ளது என ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன. ஆனால் எனது கொள்கைகள் மற்றும் நிலைப்பாட்டின் அடிப்படையில் அந்த பதவியினை பெறப்போவதில்லை என அவர் தெரிவித்தா
தான் பதவியேற்று 3 மாதங்களில் கொரோனா ஏற்பட்டதாகவும், மிகவும் இக்காட்டான காலகட்டத்தில் எதி ர் பார்த்த பெறுபேறுகளை அடைய முடியாமல் போனதாகவும் தெரிவித்த அவர் கடந்த 10 நாட்களில் நடைபெற்ற பல சம்பவங்கள் அழுத்தத்தை ஏற்படுத்தியமையினாலும், மனம் வேதனையடைந்தமையாலும் ஓய்வு பெறுகிறேன் என பேராசிரியர் W.D லக்ஷ்மன் மேலும் தெரிவித்துள்ளார்.