நீர் கட்டணம் உயர்வு?

எரிபொருட்களின் விலை அதிகரிப்பின் காரணமாக மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் நீருக்கான கட்டணமும் அதிகரிக்கப்படும் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் கலந்துரையாடல் ஒன்று நடாத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு நீர் விநியோக அமைப்பிற்கு ஒரு பிரச்சினையாக அமையாது என்றாலும், மின்சாரக் கட்டணம் உயர்வடையுமானால் நீர் வழங்கல் கட்டமைப்பிற்கு அது ஒரு பிரச்சினையாக அமையும் என அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே, எப்படியாவது மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், செலவுகளை சமன் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

அதற்கமைய, நீரை சிக்கனமாக பயன்படுத்தும் நுகர்வோர் தவிர்த்து, ஏனைய நுகர்வோருக்கு நீர் கட்டணத்தை உயர்த்த தனது அமைச்சு உத்தேசித்துள்ளதாக அமைச்சர் நாணயக்கார தெரிவித்தார்.

எனினும், நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நீர் கட்டணம் உயர்வு?

Social Share

Leave a Reply