வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை யானைகள் சரணாலயத்தை செயற்படுத்த வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தி 86 விவசாய அமைப்புகளின் உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை உத்தேச காட்டு யானைகள் முகாமைத்துவ சரணாலயத்தை வர்த்தமானியில் வெளியிடுமாறு கோரி, கடந்த ஜனவரி 18 ஆம் திகதி வல்சபுகலவில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகம் 105 நாட்கள் முன்னெடுக்கப்பட்டது.
எனினும், அதற்கான தீர்வைத் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்திருந்தது.
இருந்தபோதிலும், உரிய தீர்வு வழங்கப்படாதமையின் காரணமாக விவசாயிகள் நேற்று முன்தினம் (21/12) முதல் மீண்டும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.