கொழும்பை சூழவுள்ள வளிமண்டலத்தில் தூசித் துகள்கள் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் பிரிவின் மூத்த விஞ்ஞானி, சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளாா்.
இது இன்னும் நான்கு நாட்களுக்கு தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மைய நாட்களாக இலங்கை முழுவதும் மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளதாகவும் வட இந்தியாவின் வடபகுதியில் இருந்து வறண்ட காற்று வீசுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
இதனால் காற்றில் நீராவி இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.