ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள, லாஃப்ஸ் நிறுவனத்துக்கு எரிவாயு ஏற்றிவந்துள்ள கப்பலில் இருக்கும் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா அனுமதி வழங்கியுள்ளார்.
ப்ரொப்பேன் மற்றும் பியூட்டேன் ஆகிய இரசாயனங்களின் அளவு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த கப்பலிலுள்ள எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
250,000 மெட்ரிக் தொன் எரிவாயு இந்த கப்பலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.