அகில இலங்கை ஆயர்வேத சுகாதார சேவையாளர் சங்கத்திற்கு உட்பட்ட ஆயர்வேத வைத்தியர்கள் இன்று (24/12) சுகயீன விடுமுறை போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
சுகாதார சேவையாளர்களுக்கு வழங்கப்பட்ட கொவிட் விசேட மாதாந்த கொடுப்பனவை தமக்கும் வழங்கக்கோரி, அவர்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து ஆயர்வேத சுகாதார சேவையாளர்கள் நாவின்ன ஆயர்வேத திணைக்களத்திற்கு முன்பாகவும், பிற்பகல் வேளையில் சுகாதார அமைச்சிக்கு முன்பாகவும் தமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.