நாடளாவிய ரீதியில் இன்று(26/12) நள்ளிரவு முதல் சகல பணிகளிலும் இருந்து விலகி தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பதவி உயர்வு, பயணிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட 25 கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளனர்.
முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக புகையிரத பொது முகாமையாளர் கடிதம் மூலம் நேற்று (25/12) தொழிற்சங்கங்களுக்கு உறுதிபடுத்தினார்.
எனினும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன் தொழிற்சங்க துறையினருடன் இன்று(26/12) முற்பகல் காணொளி ஊடாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.