நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய அடுத்த ஆண்டு உணவு பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு உடனடியாக தீர்வு வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் ஆண்டு, மார்ச் மாதமளவில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 200 ரூபா வரை அதிகரிக்கக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் நேற்று (25/12) கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விவசாய திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், விவசாயத்துறை நிபுணர் கே. பீ. குணரத்ன,உரத்தட்டுபாடு காரணமாக பெரும்போக விளைச்சல் உரியமுறையில் இல்லை என தெரிவித்தார்.