அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் தொடர்பில் விசாரணைகள்

கட்டான – கிம்புலாபிட்டிய, தாகொன்ன பகுதியில் இலகுரக விமானமொன்று விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பிரதி பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், கெப்டன் தேமிய அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

கடந்த 27ஆம் திகதி, குறித்த விமானம் இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டதிலிருந்து அவசரமாக தரையிறக்கப்பட்டமை வரையிலான முழு செயன்முறையை இந்த குழு ஆராயவுள்ளது.

மற்றுமொரு அதிகாரிகள் குழு, நிறுவனத்தின் தலைமை அலுவலக அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்து வருவதுடன், ஆவணங்களையும் ஆய்வு செய்து வருகின்றது.

தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான இலகுரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டைச் சேர்ந்த தம்பதிகள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில், விசாரணைகள் நிறைவடையும் வரை குறித்த விமான நிறுவனத்தின் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் தொடர்பில் விசாரணைகள்

Social Share

Leave a Reply