அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, ஜனவரி 3ஆம் திகதி முதல் ஜனவரி 30ஆம் திகதி வரை இவ்வாறு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதாகவும், எவ்வாறாயினும், அதனை மூடினாலும் நாட்டுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதன் காரணமாக, எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.