ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சியில் நேற்று (30/12) நீராடச் சென்று காணாமல் போன மூவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் 14,16 ஆகிய வயதுகளையுடைய இரு சிறுமிகளும் 29 வயதுடைய யுவதியொருவரும் குறித்த நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.
இதனையடுத்து காணாமல் போன மூவரையும் தேடும் பணிகளை ஹங்வெல்ல பொலிஸாரும் சுழியோடிகளும் முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று (31/12) காலை 16வயதுடைய சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.