எதிர்வரும் வருடம் முதல் மக்கள் எதிர்பார்த்த மாற்றங்களை ஏற்படுத்தவும், பணிப் புறக்கணிப்பால் நட்டத்திற்கு முகங்கொடுத்த நிறுவனங்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தலைமையில் நேற்று (30/12) இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நட்டத்திற்கு முகங்கொடுத்துள்ள நிறுவனங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ச்சியான பணிப் புறக்கணிப்பினால் நட்டத்திற்கு முகங்கொடுக்கும் நிறுவனங்களை அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பதா அல்லது அதனை வேறு நிறுவனங்களுக்கு கையளிப்பதா என்பது தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.