தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் திட்டம் தாமதம்

பொது இடங்களுக்கு செல்லும் போது பொது மக்கள் தடுப்பூசி அட்டைகளை வைத்திருப்பதை கட்டாயமாக்கும் நடைமுறை தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (01/01) முதல் அமலுக்கு வரும் வகையில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்ததற்கு அமைய, குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் இறுதி செய்வதற்கு குறைந்தது இன்னும் இரண்டு வாரங்கள் வரை ஆகுமென, அவர் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் ஒப்புதலுடன், தடுப்பூசி அட்டையை எடுத்துச் செல்வது அவசியமா அல்லது QR குறியீட்டை அறிமுகப்படுத்துவது போன்ற பிற காரணிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி அட்டையை எடுத்துச் செல்வதற்குப் பதிலாக QR குறியீட்டை அறிமுகப்படுத்துவது மக்களுக்கு வசதியாக இருக்கும் என கருதும் பட்சத்தில், QR குறியீட்டை அறிமுகப்படுத்த தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் திட்டம் தாமதம்

Social Share

Leave a Reply