வவுனியா, குருமன்காட்டில் இன்று அதிகாலை எரிவாயு அடுப்பு வெடித்த சம்பம் ஒன்று இடம்பெற்றுளளது. சமையலில் பெண் ஒருவர் ஈடுபட்ட போது அடுப்பு வெடித்துள்ளது. இதன்போது அந்த பெண்ணுக்கு காலில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்துக்க்கு சொந்தமான எரிவாயுவைனை பாவித்து சமையலில் ஈடுபட்ட போதே இந்த சமபவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை நேற்றைய தினமும் வவுனியா, வைரவர் புளியங்குளம் பகுதியில் எரிவாயு வெடிப்பு சம்பம் ஒன்று நடைபெற்றுள்ளது.வவுனியா மாவட்டத்தில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் அதிகம் பதிவாகி வருகின்றன.
