அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லைக்கான சுற்று நிருபம்

அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கும் சுற்றுநிருபம் இன்று (06/01) வெளியிடப்படவுள்ளதாக பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட யோசனைக்கமைய இந்த சுற்றுநிரூபம் வெளியிடப்படவுள்ளது.

எனினும், அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கும் திட்டத்திற்கு இலங்கை நிர்வாக சேவை சங்கம் எதிர்ப்பு தெரிவித்து, ஓய்வுபெறும் வயது 62 ஆக காணப்பட வேண்டும் என பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தினூடாக இதற்கு முன்னர் தெரிவித்திருந்தது.

அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லைக்கான சுற்று நிருபம்

Social Share

Leave a Reply