கொழும்பு மாவட்டத்தில் 16 மணித்தியால நீர் வெட்டு இடம்பெறும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய நாளை மறுதினம் (08/01) காலை 8 மணி தொடக்கம் இரவு 12 மணி வரை நீர் வெட்டு இடம்பெறுமென அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அம்பத்தலே நீர் விநியோக கட்டமைப்பில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப்பணிகளின் காரணமாக, கொழும்பு, தெஹிவளை – மவுன்ட் லெவனியா, கோட்டை மற்றும் கடுவெல ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலொன்னாவ ஆகிய பகுதிகளிலும், கொட்டிக்காவத்தை முல்லேரியாவ பிரதேச சபைக்குட்பட்ட பிரிவுகளிலும் மற்றும் ரத்மலானையிலும் நீர் விநியோகம் தடைப்படுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.