யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியில் வீடொன்றில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வயதான கணவன், மனைவியிருந்த வீட்டில் நேற்று (06/01) திடீரென புகுந்த திருடர்களினால் அங்கிருந்த நகை, பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, வீட்டிலிருந்த நபரை அறைக்குள் 3 மணிநேரம் வரை பூட்டி வைத்திருந்த நிலையில், அவரது வயோதிப மனைவியை கொள்ளையர்கள் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கெனவே இருதய சிகிச்சை செய்திருந்த அவரின் நெஞ்சுப் பகுதியில் தாக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அவர் மாவட்ட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரவித்துள்ளனர்.