12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று (07/01) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை விரைவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.