ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிக்கவௌ பகுதியை அண்மித்த காட்டுப் பகுதியில் பெண்ணொருவரின் சடலம் (06/01) மீட்கப்பட்டுள்ளது.
புடவை அணிந்திருந்த நிலையில் 55 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் யாருடையது பற்றிய விபரம் இதுவரை கண்டறிப்படாத நிலையில், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் குறித்த சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்து சடலத்தை பார்வையிட்ட நீதவான்; பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக அநுராதபுர போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
(திருகோணமலை நிருபர்)