‘ஜனாதிபதியின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தவறிய அதிகாரிகள்’

இரசாயன உரப் பாவனையைத் தடைசெய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் ஒரு வலுவான முடிவு எனவும், ஆனால் உரிய அதிகாரிகளால் அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியவில்லை என, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியேற்றவுடன் இரசாயனமற்ற உரத்திற்கு மாறுவதற்கான தனது தீர்மானத்தை ஜனாதிபதி அறிவித்ததாகவும், ஆனால் அதிகாரிகள் இந்த விடயத்தை வெற்றிகரமாக முன்னெடுக்காததால் அச்செயற்றிட்டம் தவறவிடப்பட்டதாகவும், அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பொறுப்பாக செயற்படாததன் காரணமாக, இறுதியாக ஜனாதிபதி கடுமையான தீர்மானமொன்றை எடுக்க நேரிட்டது என்றும் தெரிவித்தார்.

மேலும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பான நெருக்கடிகளுடன், ராஜபக்ஷ ஆட்சியின் தற்போதைய புகழ் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஒப்புக்கொண்ட நாமல், ஆனால் இது தற்காலிகமானது என்றும், இந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

'ஜனாதிபதியின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தவறிய அதிகாரிகள்'

Social Share

Leave a Reply