நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் இன்று (10/01) வழமைக்குத் திரும்பின.
கடந்த நாட்களில் பகுதியளவில் மாணவர்கள் அழைக்கப்பட்டு, கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைய, சகல பாடசாலைகளிலும் கற்றல் செயற்பாடுகளை வழமை போல் முன்னெடுக்க இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளை மாத்திரம் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
