21 ஆம் திகதி நாடு திறக்கப்படுமா? அரச தரப்பில் முரணான தகவல்கள்

21 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரச தரப்பில் இரண்டு வித தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுகாதா இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னான்டோபிள்ளை 21 ஆம் திகதி முதல் நாடு திறக்கப்படும். கொரோனா தொற்று வீழ்ச்சியடைவதாகவும், இறப்பு வீதம் குறைவடைந்து வருவதனாலும் பொருளாதார வீழ்ச்சியினை தடுப்பதற்கு நாட்டை திறக்க வேண்டும் என கூறியிருந்தார்.

ஊரடங்கு தொடர்பாக முடிவெடுக்கப்படும் போது அது பற்றி அறிவிக்கப்படுமென அமைச்சரவை இணை பேச்சாளர் இராஜாங்க அமைச்சர் ரமேஷ் பத்திரின இன்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
இம்மாத இறுதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும் என நம்பலாம். தற்போது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவே சுகாதர துறையினரின் பரிந்துரை போலவே, மக்களின் பொருளாதரம் தொடர்பிலும் கவனமெடுக்க வேண்டும். அதனடிப்படையில் முடிவு எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் இந்த மாத இறுதியில் வீழ்ச்சி ஏற்படும் என கூறியிருப்பது மேலும் ஒரு வாரம் அதாவது 27 ஆம் திகதி வரை ஊரடங்கு செல்லுமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எது எப்படியிருப்பினம் மக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஆனால் மக்களின் நடவடிக்கைகள் மோசமாகவே காணப்பட்டு வருகின்றது. இல்லாவிட்டால் தொற்று இன்னமும் பாரிய அளவில் வீழ்ச்சி கண்டிருக்கும்.

21 ஆம் திகதி நாடு திறக்கப்படுமா? அரச தரப்பில் முரணான தகவல்கள்

Social Share

Leave a Reply