2021 செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
15ஆம் திகதியன்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அவர் தனது கடமைகளை இரண்டாவது முறையாக பொறுப்பேற்கவுள்ளார்.
பிரசித்திபெற்ற பட்டயக் கணக்காளரான அஜித் நிவாட் கப்ரால் , இதற்கு முன்னர் அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளதோடு, 2006 ஆம் ஆண்டு முதல் சுமார் 2015 ஆண்டு காலப்பகுதி வரை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று 14 ஆம் திகதியுடன் கலாநிதி W.D லக்ஷ்மன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து மன வேதனையுடன் விலகுவதாக அறிவித்திருந்தார்.
நாளை முதல் பொறுப்பேற்கவுள்ள அஜித் நிவாட் கப்ரால், கண்ணீர் விடாமல் மத்திய வங்கியைனை மேற்கொண்டு செல்ல கடுமையாக உழைப்பேன் என கூறியுள்ளார்.
