‘ஈஸ்டர் தாக்குதல் பற்றிய விபரங்களை வெளியிட தயார்’

ஈஸ்டர் தாக்குதல் பற்றிய விபரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பல்மடுல்ல பகுதியில் நடைபெற்ற சுதந்திரக் கட்சி கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தம்மை கைது செய்யும் நோக்கில் பலர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் பற்றி பேசி வருவதாகவும். எனினும், உரிய நேரத்தில் தாக்குதல் பற்றிய தகவல்களை தாம் வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுக்களை தம் மீது சுமத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

‘ஈஸ்டர் தாக்குதல் பற்றிய விபரங்களை வெளியிட தயார்'

Social Share

Leave a Reply