43 தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கையின் வடக்கு கடற்பகுதி நெடுந்தீவுக்கு அருகே கைதுசெய்யப்பட்ட 43 தமிழக மீனவர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (13/01) ஊர்காவற்றுறை நீதிமன்றில் அவர்களை முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் மீள விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு கடலில் கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 43 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

43 தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Social Share

Leave a Reply