ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் ஆரம்ப விழாவுக்கான விசேட ஒத்திகை பாராளுமன்ற வளாகத்தில் இன்று (13/01) இடம்பெற்றது.
எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஆரம்ப நிகழ்வினை வெற்றிகரமாக முன்னெடுக்கும் வகையில் இந்த ஒத்திகை இடம்பெற்றதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாளை (14/01) முதல் வார இறுதி விடுமுறை என்பதுடன் எதிர்வரும் வாரம் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் இன்றைய நாளில் ஒத்திகை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 18ஆம் திகதி காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
