நாட்டில் மீண்டும் ஒக்சிஜன் தேவை அதிகரிப்பு

இலங்கையில் மீண்டும் ஒக்சிஜன் பிராண வாயுவின் தேவை அதிகரித்துள்ளதாக கொவிட் தொடர்பான இராஜாங்க அமைச்சின் பிரதான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (17/01) இடம்பெற்ற ஊடகவயலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அதுதொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ஒக்சிஜன் தேவையுடைய கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அத்துடன் நோயாளர்களுக்கான கட்டில்களிலும் பற்றாக்குறை நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் பொதுமக்கள் உரிய வகையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் மீண்டும் ஒக்சிஜன் தேவை அதிகரிப்பு

Social Share

Leave a Reply