ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் இன்று (18/01) சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்ற விருந்துபசாரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் புறக்கணித்திருந்தனர்.
பாராளுமன்றில் இன்று அக்கிராசன உரையாற்றிய பின்னர் ஜனாதிபதியால் சம்பிரதாயபூர்வமான விருந்துபசாரம் ஒன்று வழங்கப்பட்டிருந்தது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் மாத்திரமே கலந்து கொண்டிருந்த நிலையில், கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை புறக்கணித்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அதுதொடர்பில் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன், குறித்த தேநீர் விருந்துபசாரத்தைப் புறக்கணிப்பதற்குக் கூட்டமைப்பு தீர்மானித்திருந்ததாகத் தெரிவித்தார்.
