வவுனியாவில் டெங்கு அபாயம்

வவுனியா மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை அங்கு 20 டெங்கு நோயாளர்கள் வரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களை விட வவுனியாவில் டெங்கு நோய் அபாயம் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்திலிருந்து பல்வேறு தேவைகளுக்காக மன்னார், யாழ்ப்பாணம் நோக்கி சென்று வரும் வவுனியா மக்களே அதிகளவு டெங்கு நோய்த் தொற்றுக்குள்ளாகி வருவதாகவும் பிரதேச மக்கள் தத்தமது திண்மக்கழிவுகளை முறையாக அகற்றுவார்களாயின் டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தை தடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் டெங்கு அபாயம்

Social Share

Leave a Reply