பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையர் பிரியந்தா குமாராவின் கொலை சம்பவத்தை நியாயப்படுத்தி அவரது கொலை சபவத்தை வீடியோ காட்சியாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஒரு வருட சிறை தண்டனையும், 10,000 ரூபா தண்டமும் அறவிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
சமய ரீதியாக அந்த கொலை சரியானது என சமூக வலைத்தளங்களில் குறித்த நபர் வீடியோ பதிவினை செய்துள்ளார். டிசம்பர் 03 ஆம் திகதி பிரியந்த கொலை செய்யப்பட்டார். 05 ஆம் திகதி தண்டனை பெற்ற நபரினால் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த நபருக்கு எதிராக பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் முன்னிலை செய்யப்பட்டிருந்தார். விரும்பத்தகாத சமய கருத்துக்களை பகிர்ந்து, மக்களை தூண்டிய குற்றத்துக்காக 27 வயதான முகமட் அட்னான் என்ற நபரே இவாறு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
