மின்சார மாஃபியாவினால் சிக்கல்கள் – மைத்திரி

மின்சாரத்துறையில் எழுந்துள்ள பிரச்சினை தற்போது ஏற்பட்டதல்ல என்றும் அது பல வருடங்களாக நிலவும் மாஃபியா என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது நீண்டகாலமாக நிலவிவரும் பிரச்சினை என்பதுடன் தனியார் பிரிவுகள் தனியாக அதிகளவான மின்சாரத்தை பெறுகின்றனர். இதற்காக பில்லியன் கணக்கான பணம் செலவிடப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

நீண்ட காலமாக இருந்து வரும் பிரச்சினைகள் இன்று பாரியளவான முரண்பாடுகளுக்கு வித்திட்டுள்ளன.

எனவே தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் உரிய பிரிவுகளுடன் இணைந்து கலந்துரையாடி பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மின்சார மாஃபியாவினால் சிக்கல்கள்  - மைத்திரி

Social Share

Leave a Reply