கொழும்பு – பதுளை பிரதான வீதியின் பலங்கொடை மாதொல பிரதேசத்தில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (25/01) இடம்பெற்ற குறித்த விபத்தில் காரில் பயணித்த நபர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பதுளை – பஹல ரஜ வீதியில் சித்து வந்த ஹேமச்சந்ர விக்ரமரத்ன என்ற 75 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
