துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லூட் கௌசோக்லு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

இன்று (28/01) காலை அவர் துருக்கியில் இருந்து விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.இவரை இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாரசூரிய வரவேற்றுள்ளார்.

துருக்கி வெளிவிவகார அமைச்சருடன் 13 பேர் கொண்ட தூதுக் குழுவொன்றும் வந்துள்ள நிலையில் இவர்கள் கொழும்பில் இன்று மாலை வரையில் தங்கியிருந்து வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்
துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

Social Share

Leave a Reply