சிறுபான்மை கட்சிகளை சந்தித்து அரசாங்கம் விரைவில் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (30/01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில், தமிழ்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய வடக்கு – கிழக்கு கட்சிகளுக்கும் முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.
தற்போது நிலவும் அரசியல் பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் குறித்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்படுவதாக நீதியமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.