பொட்டேட்டோ கார்லிக் ரிங்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்தமான ஒரு மாலை நேர சிற்றுண்டி. குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் இதற்கு இருக்கும் வரவேற்பே தனி தான் என்றால் அது மிகை அல்ல. இதன் அசத்தலான சுவை மற்றும் மொறு மொறுப்பான தன்மையே இதற்கு முக்கிய காரணம்.
Potato Garlic Rings
பொட்டேட்டோ கார்லிக் ரிங்ஸ்ஸின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே நாம் செய்து விடலாம். அது மட்டுமின்றி இவை நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்யக்கூடியவை. மேலும் இதை செய்வதற்கும் குறைந்த பொருட்களே தேவைப்படும். ஸ்கூலில் இருந்து வரும் நம் குழந்தைகளுக்கு இந்த அட்டகாசமான மற்றும் மொறு மொறுப்பாக இருக்கும் பொட்டேட்டோ கார்லிக் ரிங்ஸ்ஸை நாம் செய்து கொடுத்தால் அவர்கள் இதை மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.
இப்பொழுது கீழே இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
பொட்டேட்டோ கார்லிக் ரிங்ஸ் ரெசிபி
பிரபலமாகஇருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி
Prep Time15 mins
Cook Time15 mins
Total Time30 mins
Course: Snack
Cuisine: Indian
Keyword: potato garlic rings
பொட்டேட்டோ கார்லிக் ரிங்ஸ் செய்ய தேவையான பொருட்கள்
- ½ கப் ரவை
- 2 உருளைக்கிழங்கு
- 2 மேஜைக்கரண்டி சோள மாவு
- 3 பூண்டு பல்
- 1 மேஜைக்கரண்டி சில்லி ஃப்ளேக்ஸ்
- ¼ மேஜைக்கரண்டி சாட் மசாலா
- 2 மேஜைக்கரண்டி வெண்ணெய்
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு கொத்தமல்லி
பொட்டேட்டோ கார்லிக் ரிங்ஸ் செய்முறை
- முதலில் பூண்டு மற்றும் கொத்தமல்லியை நன்கு பொடியாக நறுக்கி எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு அதை சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை வேக விடவும்.
- 25 நிமிடத்துக்கு பிறகு அதை எடுத்து சிறிது நேரம் ஒரு பாத்திரத்தில் வைத்து ஆற விட்டு பின்பு அதை எடுத்து ஒரு bowl ல் வைத்து நன்கு ஒரு கரண்டியின் மூலம் மசித்து விடவும். (தண்ணீர் இதில் சேர்ந்து விடாமல் பார்த்து கொள்வது மிகவும் அவசியம்.)
- இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் ரவையை கொட்டி அதை நன்கு நைசாக அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு வெண்ணெய் சேர்த்து அதை உருக விடவும்.
- வெண்ணெய் உருகியதும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டை போட்டு பூண்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
- பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் சில்லி ஃப்ளேக்ஸ்ஸை போட்டு நன்கு கலந்து விட்டு சுமார் அரை நிமிடம் வரை அதை வதக்கவும்.
- அரை நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விட்டு பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு அதை கொதிக்க விடவும். (சுமார் அரை கப் அளவு தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.)
- அது நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை முற்றிலுமாக குறைத்து வைத்து அதில் நாம் நைசாக அரைத்து வைத்திருக்கும் ரவையை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
- பின்னர் அதில் நாம் வேக வைத்து மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் சாட் மசாலாவை போட்டு அதை நன்கு கலந்து விட்டு பின்பு அடுப்பை அணைத்து அதை கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் ஆற விடவும். (சாட் மசாலாவை விரும்பாதவர்கள் அதை தவிர்த்து விடலாம்.)
- உருளைக்கிழங்கு கலவை சிறிது ஆறியதும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் சோள மாவை போட்டு அதை நன்கு நம் கைகளின் மூலம் கலந்து விட்டு அதை நன்கு சுமார் 5 லிருந்து 6 நிமிடம் வரை பிசையவும்.
- 6 நிமிடத்திற்கு பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- பிறகு ஒரு கிண்ணத்தில் சிறிதளவு சோள மாவை கொட்டி வைத்து கொள்ளவும்.
- அடுத்து நாம் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு கலவையை எடுத்து நம் கைகளில் வைத்து தட்டி அதை கிண்ணத்தில் இருக்கும் சோள மாவில் இரு புறமும் போட்டு எடுத்து சப்பாத்தி கல்லில் வைத்து நன்கு அனைத்து புறங்களிலும் சமமாக தேய்க்கவும்.
- பின்பு ஒரு பெரிய சைஸ் டம்ளர் மற்றும் அதற்கு அடுத்த சைஸ் சின்னதாக இருக்கும் டம்ளரை எடுத்து கொள்ளவும்.
- பின்னர் நாம் தேய்த்து வைத்திருக்கும் மாவில் முதலில் பெரிய டம்ளரை வைத்து அச்சி ஏற்படுத்தவும், பின்பு சிறிய சைஸ் டம்ளரை நாம் ஏற்படுத்திய அச்சின் உள்ளே வைத்து இன்னொரு அச்சியை ஏற்படுத்தி அதில் வரும் ரிங்ஸ்ஸை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- இவ்வாறு மீதமுள்ள ரிங்ஸ்களை செய்து எடுத்து ஒரு தட்டில் தயாராக வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் செய்து வைத்திருக்கும் ரிங்ஸ்களை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் கடாயின் அளவிற்கேற்ப அதில் நாம் செய்து வைத்திருக்கும் ரிங்ஸ்களை பக்குவமாக போட்டு அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி விட்டு அது பொன்னிறமாகும் வரை அதை பொரிக்கவும்.
- அது பொன்னிறமானதும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மொறு மொறுப்பாக இருக்கும் பொட்டேட்டோ கார்லிக் ரிங்ஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.