யுக்ரைன் தலைநகர் கிவ் நகருக்குள் ரஸ்சியா இராணுவம நுழைந்துள்ளதாக யுக்ரைன் ஜனாதிபதி வொலிடிமிர் ஷெலென்ஸ்கி அறிவித்துள்ளார். ரஸ்சியா இராணுவத்தின் யுக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கை இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.
இதுவரையில் யுக்ரைன் இராணுவம், மற்றும் பொது மக்கள் அடங்கலாக 137 பேர் உயிரிழந்துள்ளதாக யுக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ரஸ்சியா இராணவத்தினர் அண்ணளவாக 50 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.
350 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 4000 இற்கு மேற்பட்டவர்கள் அண்டைய நாடுகளுக்குள் அகதிகளாக சென்றுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸ் நாடு யுக்ரைனுக்கு உதவும் முகமாக பாரியளவிலான நிதி தொகையினை வழங்கியுள்ளது. போர் ஆயுதங்கள் மற்றும் நிவாரண உதவிகளுக்காக இந்த உதவிகளை வழங்குவதாக அந்த அரசாங்கம் அறிவித்துள்ளது.
உலக நாடுகளது தலைவர்கள் பலரும் யுக்ரைனுக்கான உதவி திட்டங்கள் தொடர்பில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அத்தோடு ரஸ்சியா மீது பொருளாதார தடைகளையும், பயண தடைகளையும் பல நாடுகளும் விதித்து வருகின்றன. உலக நாடுகள், உலக அமைப்புகள் இந்த போருக்கு தமது எதிர்ப்பை அறிவித்துள்ள போதும், போரை நிறுத்துமாறு கோரிக்கையினை முன் வைத்தும் ரஸ்சியா எந்தவித அறிவிப்புகளையும் செவி சாய்க்காமல் போரில் உறுதியாக செயற்பட்டு வருகிறது.
யுக்ரைனின் கிழக்கு பகுதியினையும், அதன் தலைநகரையும் முழுமையாக கைப்பற்றுவதே ரஸ்சியாவின் குறிக்கோள் என செய்திகள் வெளியாகியுள்ளன.
தொடர்புடைய செய்தி