சுகாதர அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தற்போது குடியிருக்கும் சரண வீதி வீட்டின் மின்சார தொகையில் 12 மில்லியன் ரூபாவினை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல செலுத்தவில்லை எனவும், அதனை செலுத்துமாறு கடிதம் அனுப்பியதாகவும் இலங்கை மின்சாரசபை நேற்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தான் 7 மில்லியன் ரூபாவினை இலங்கை மின்சாரசபைக்கு செலுத்தியுளளதாகவும், ஆனால் கணக்கில் வித்தியாசம் காணப்படுவதாகவும் இன்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டுக்கு தான் இந்த வீட்டுக்கு வந்ததாகவும், இந்த மின்பட்டியில் சிக்கல் தொடர்பில் பல தடவைகள் இலங்கை மின்சாரசபைக்கு அறிவித்துள்ளதாகவும், தனது பெயருக்கு மின் பட்டியலை மாற்றுமாறு கோரியும் இன்னமும் அதுவும் நடைபெறவில்லை எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இலங்கை மின்சாரசபை மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
தான் இந்த வீட்டுக்கு வந்தபோது 25,000 ரூபா தொடக்கம் 30,000 ரூபா வரை கட்டணம் வந்ததாகவும், பின்னர் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும், சிலவேளைகளில் 760,000 ரூபா வரை மின் கட்டணம் கூட வந்ததாகவும் தெரிவித்த அவர், இந்த விடயங்கள் தொடர்பில் எழுத்து மூலமாக இலங்கை மின்சாரசபைக்கு கடிதம் அனுப்பியும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி
