7 1/2 மணித்தியால மின் வெட்டு தொடரும்

மின்சாரசபையினால் அமுல் செய்யப்பட்டு வரும் 7 1/2 மணி நேர மின்தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் இன்னமும் கிடைக்கத நிலையில் நாளையும் (04.03) 7 1/2 மணி நேர மின் வெட்டு அமுல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபையினால் பொதுசேவைகள் ஆணைக்குழுவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் மின்சாரசபை மற்றும் பெற்றோலிய உயர் அதிகாரிகளுடனான கூட்டத்தில் இன்றுடன் (03.03) எரிபொருள் தட்டுப்பாடு நீங்குமெனவும் ஐந்தாம் திகதியுடன் மின்தடை நிறைவுக்கு வருமெனவும் கூறியிருந்தனர்.

இன்று எரிபொருள் தட்டுப்பாடு குறைவடைந்ததனை பார்க்க கூடியதாக இருக்கவில்லை. மாறாக வரிசை இன்னமும் அதிகரித்தே காணப்படுகிறது. நேற்றைய தினம் டீசல் கப்பல் ஒன்றும் இலங்கை வந்து சேர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மின்தடை நேரங்களும் இடங்களும் கீழுள்ள பட்டியலிலுள்ளன.

7 1/2 மணித்தியால மின் வெட்டு தொடரும்

Social Share

Leave a Reply