அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கபப்ட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கையின் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் இடம்பெறுவதாக அறிய முடிகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தமாற்றங்களை செய்துளளதாகவும், மேலும் மாற்றங்களை செய்து வருவதாகவும் அறிய முடிகிறது. அதனடிப்படையில் இரண்டு அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
வலுசக்தி அமைச்சராக இருந்த உதய கம்மன்பில நீக்கப்பட்டு அந்த இடத்துக்கு காமினி லொக்குகே புதிய வலுசக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மின்சத்தி அமைச்சராக பவித்திரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச வகித்த கைத்தொழில் அமைச்சுக்கான பதவியினை பெறவுள்ளதாக தகவல்கல் வெளியாகியுள்ளன. S.B திஸ்ஸநாயக்க கல்வியமைச்சராக பதவியேற்கவுள்ளதாகவும், தினும் அமுனுகம போக்குவரத்த்து அமைச்ராக பதவியேற்கும் வாய்ப்புகளுள்ளதாகவும் மேலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
