இலங்கை அரச பிரதிநிதிகள்,மனித உரிமை ஆணையாளர் சந்திப்பு

இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜெனீவாவிலுள்ள மனித உரிமை அலுவலகத்தில் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தலைமையிலான இலங்கை அரச பிரதிநிதிகள் குழுவிலுள்ள நீதி அமைச்சர் அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயந்த கொலம்பகே ஆகியோர் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்டை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் 49 ஆவது கூட்ட தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. இலங்கை தொடர்பிலான அறிகையினை மனித உரிமை ஆணையாளர் ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

ஜெனிவா சென்றுள்ள இந்த அரச குழு பாகிஸ்தான், பலஸ்தீன், தென் கொரியா, சவுதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளனர்.

இலங்கை அரச பிரதிநிதிகள்,மனித உரிமை ஆணையாளர் சந்திப்பு

Social Share

Leave a Reply