பதவி புறக்கணிப்பில் வாசுதேவ

நீவழங்கள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தான் அமைச்சரவைக்கும், அமைச்சுக்கு சொல்லப்போவதில்லை என இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோர் அமைச்சு பதவிகளிலிருந்து ஜனாதிபதியினால் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்த பதிவு புறக்கணிப்பை அறிவித்துள்ளார்.

பதவி நீக்கப்பட்ட இருவருக்கும் நீதி கிடைக்கும் வரை தான் இந்த பணி புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

அரசுக்கு எதிராக வாசுதேவ நாணயக்கார இவ்வாறு செயற்படுவதன் காரணமாக அவரின் பதவியும் நீக்கப்படுமா என்ற சந்தேகமும் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சிக்குள் அரசாங்கத்துக்கு எதிராக கருத்துக்களை முன்வைப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமையும் சுட்டி காட்டத்தக்கது.

பதவி புறக்கணிப்பில் வாசுதேவ

Social Share

Leave a Reply