இலங்கை மின்சார சபைக்கு 44 பில்லியன் வருமதியுள்ளது

இலங்கை மின்சார சபைக்குரிய வரிப்பணம் 44 பில்லியன் வருமதி உள்ளதென மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குஹே தெரிவித்துள்ளார். மின்சார கட்டணங்களை கட்டாதவர்களுக்கு மேலும் ஒரு மாதம் சலுகை வழங்கினால் இலங்கை மின்சார சபை நிதி நிலைமையில் மேலும் மோசமாக பாதிக்கப்ப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

மாதத்துக்கு 44 மில்லியன் ரூபா வரியாக இலங்கை மின்சார சபைக்கு கிடைத்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக மின்சார சபைக்கு கிடைக்க வேண்டிய வரியும் கிடைக்கவில்லை. தற்கால சூழ்நிலை காரணமாக மின்சாரத்தை துண்டிக்காமல் பாவனையர்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுள்ளது. அதற்கான மேலதிக கட்டணங்களும் அறவிடப்படுவதில்லை. ஆனால் அதற்கான வாய்ப்புகள் இனியும் வழங்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபைக்கு 44 பில்லியன் வருமதியுள்ளது

Social Share

Leave a Reply