அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஷேன் வோர்ன் இயற்கையாகவேதான் மரணமாகியுள்ளதாக மருத்துவ அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை ஷேன் வோர்ன் தங்கியிருந்த விலாவில் அசைவுகளின்றி காணப்பட்டதனை தொடர்ந்து அவரை மருத்துவர்கள் பரிசோதித்து இறந்ததாக உறுதி செய்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தோடு அவர் தங்கியிருந்த அறையில் அசாதாரணமான எந்த விடயங்களும் தென்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ள அதேவேளை, ஷேன் வோர்னின் உடல் அவுஸ்திரேலியா தூதரகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் அவுஸ்திரேலியாவில் ஷேன் வோர்னின் இறுதி நிகழ்வுகளை நடாத்த குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளதாகவும், மெல்மெர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அவருக்கான இறுதி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.
மெல்மெர்ன் கிரிக்கெட் மைதானத்திலேயே வோர்ன் 700 ஆவது டெஸ்ட் விக்கெட்டினை கைப்பற்றியிருந்தார். அந்த மைதானத்தின் ஒரு அரங்கு S.K வோர்ன் அரங்கு என பெயரிடப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.