நாளைய தினம் (08.03) மின்தடை, இன்று (07.03) போன்றே தடை செய்யப்படவுள்ளதாக பொது சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
குழுக்கள் E மற்றும் F ஆகிய இடங்களில் 7 1/2 மணி நேரம் தடை செய்யப்படவுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 06 மணிவரையான நேரப்பகுதியில் 5 மணி நேரமும், மலை 06 மணி முதல் இரவு 11 மணி வரையான நேரப்பகுதியில் 2 1/2 மணி நேரமும் மின்தடை செய்யப்படவுள்ளது.
P, Q, R, S, T, U, V மற்றும் W பகுதிகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையான நேரப்பகுதியில் 3 மணி நேரமும் மின் தடை செய்யப்படவுள்ளது. 9 மணி முதல் மாலை 5 மணி வரையான நேரப்பகுதியில் 2 மணித்தியாலங்களும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான நேரப்பகுதியில் 1 மணி நேரமும் இந்த பகுதிகளில் தடை செய்யப்படவுள்ளது.
விரைவில் மின் தடை நேரம் குறைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக பொது சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரட்நாயக்க தெரிவித்துள்ளார். இன்னமும் இரண்டு மூன்று தினங்களில் தேவையான எரிபொருள், மின்சார சபைக்கு கிடைக்குமென நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர், 30,000 மெற்றிக் தொன் பியூரன்ஸ் ஒயில் இன்று இலங்கையை வந்து சேர்ந்துள்ளதாகவும், நாளை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கவுள்ளதாகவும், நாட்டுக்கு தேவையான முழுமையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மழை வீழ்ச்சி அதிகரித்துள்ளதோடு, தேவையான நிலக்கரியும் காணப்படுவதனால் எதிர்வரும் தினங்களில் மின் உற்பத்தி அதிகரிக்கும் என தெரிவித்துள்ள ஜனக்க ரட்நாயக்க, மழை வீழ்ச்சி தேவையான அளவு கிடைக்கும் வரை மின்தடை தொடரும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.