இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (07.03) கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு ரீதியான இருதரப்பு உறவுகளை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்,இரு நாடுகளிற்கும் இடையிலான அந்த வலுவான நட்புறவு ரீதியான உறவை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அமெரிக்கா தூதுவரிடம் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையுடனான சமூக,பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகள் குறித்து கவனம் செலுத்திய தூதுவர், அத்தகைய உறவுகள் மேலும் மேம்படுவதை காண்பது தனது எதிர்ப்பாகும் என சஜித் பிரேமதாசவிடம் தெரிவித்துள்ளார்.