வுனியா, கூமாங்குளம் பகுதியில் வறுமை கோடுக்குட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு வீடு கட்டி நேற்றைய தினம் (07.03) கையளிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவை சேர்ந்த யோகராசா நிவேதனின் ஒருங்கிணைப்பில் அமெரிக்கா ரைஸ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் நிதி பங்களிப்போடு, வவுனியா பொலிஸாரின் கட்டிட நிர்மாண பிரிவு இந்த வீட்டினை அமைத்து கையளிக்கப்பட்டுள்ளது.
வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் கலகமகே, பொலிஸ் கட்டிட நிர்மாண பிரிவு பொறுப்பதிகாரி, யோகராசா நிவேதன ஆகியோர் இந்த வீட்டை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி வவுனியா முன்நாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸ லால்,யோகராசா நிவேதன ஆகியோரினால் அடிக்கல் நாட்டப்பட்டு இந்த வீடு கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
தொடர்புடைய செய்தி



