கொரோனோ உடலுறவுக்கு பாதிப்பில்லை

கொரோனா தொற்று ஏற்பட்ட இளைஞர்களுக்கு உடலுறவு கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மகப்பேற்று சிக்கல் ஏற்படுவதாகவும் வெளியாகவும் தகவல்களில் உண்மையில்லை என சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரையில் விஞ்ஞான பூர்வமாக இவ்வாறான சிக்கல்கள் நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள கொவிட் 19 இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்டானி, மக்கள் இது தொடர்பில் அச்சமடைய தேவையில்லை எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

பூஸ்டர் ஊசிகளை ஏற்றுவதன் மூலம் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல்கள் உள்ளதாக வெளியாகும் செய்திகளிலும் எந்தவித உண்மை தண்மையும் இல்லை என மேலும் வைத்தியர் அன்வர் ஹம்டானி தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பொய்யான தகவல்களை நம்புவதை நிறுத்தி உடனடியாக பூஸ்டர் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுவரை 52 சதவீதமானவர்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை ஏற்றியுள்ளதாகவும், திருப்தயளிக்கும் மட்டத்தில் இது காணப்பட்டாலும், இன்னமும் இது அதிகரித்தல் சுமூகமான ஒரு நிலைக்கு நாடு செல்லுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனோ உடலுறவுக்கு பாதிப்பில்லை

Social Share

Leave a Reply